புதுடில்லி: பாகிஸ்தானின் லாகூர் நகரில் இருந்து, ரஷ்யா, ஆப்கன் உள்ளிட்ட நாடுகளுக்கு, இந்திய விமானப்படை விமானம் மூலம், பிரதமர், நரேந்திர மோடி சென்றதற்கு, பாதை பயன்பாட்டு கட்டணமாக, 2.86 லட்சம் ரூபாயை, பாக்., அரசு வசூலித்துள்ளது.
ஆர்.டி.ஐ., எனப்படும், தகவல் உரிமை சட்டத்தில் பெறப்பட்ட பதில் விபரம்:கடந்த, 2016, ஜூன் வரை, பாக்., நேபாளம், பூட்டான், வங்கதேசம், ரஷ்யா, ஈரான் உட்பட, 11 நாடுகளுக்கு, இந்திய விமானப்படை விமானம் மூலம், பிரதமர்,மோடி பயணித்து உள்ளார்.
2015, டிச., 25ல், அப்போதைய, பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீப் வேண்டுகோள்படி, பாக்.,கில் உள்ள லாகூர் நகருக்கு, பிரதமர் மோடி சென்றார்.
நவாஸ் ஷெரீப்பை சந்தித்து விட்டு, சிறிது நேரம் கழித்து, ரஷ்யா, ஆப்கன் நாடுகளுக்கு மோடி சென்றார். அப்போது, விமான பாதைபயன்பாட்டு கட்டணமாக, 1.49 லட்சம் ரூபாயை, பாக்., அரசு பெற்றுள்ளது. அதேபோன்று, 2016, மே, 22 - 23 தேதிகளில், மோடி பயன்படுத்திய, இந்திய விமானபடை விமானத்தின் பாதை பயன்பாட்டு கட்டணமாக, 77 ஆயிரம் ரூபாயும், 2016, ஜூன், 4 - 6 தேதிகளில், ரூ.59 ஆயித்தை பாக்., அதிகாரிகள் வசூலித்துள்ளனர். இந்த இரு முறையும், பாக்., வான் வழியே, இந்திய விமானப்படை விமானம் பறந்து சென்றது. இவ்வாறு, அந்த பதிலில் கூறப்பட்டுஉள்ளது.

Comments
Post a Comment